மத்திய அரசு, இந்திய தபால் துறை வாயிலாக செயல்படுத்தி வரும் ஒரு சூப்பர் திட்டம் கிசான் விகாஸ் பத்திரம் திட்டம். நாட்டிலுள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் இந்த கிசான் விகாஸ் பத்திரத்தை நீங்கள் வாங்க முடியும்.
10 வயதுக்கு மேற்பட்ட மைனர் கூட இந்த பத்திரத்தை வாங்கலாம். அவரது பெயரில் வயது வந்தவர்கள் வாங்க முடியும். கிசான் விகாஸ் பத்திரத்தைத் தனிநபரோ அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ வாங்க முடியும்.
வட்டி எவ்வளவு?
கிசான் விகாஸ் பத்திர திட்டத்துக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மத்திய நிதியமைச்சகம் நிர்ணயிக்கிறது. தற்போதைய நிலவரப்படி 6.9 சதவீத வட்டி நடைமுறையில் உள்ளது. இதன்படி பார்த்தால் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 124 மாதங்களில் இரட்டிப்பாகி விடும..
முதலீட்டு வரம்பு:
இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தது 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.
சலுகைகள் என்ன?
நீங்கள் ஒரு நபரின் பெயரில் இருந்து மற்றொரு நபரின் பெயருக்கு இந்தப் பத்திரத்தை மாற்ற முடியும். அதேபோல, ஒரு அஞ்சல் அலுவலகத்திலிருந்து மற்றொரு அஞ்சல் அலுவலகத்துக்கும் நீங்கள் பத்திரக் கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.
எப்போது பணத்தை எடுக்கலாம்?
நீங்கள் பத்திரம் வாங்கிய பின்னர் இரண்டரை ஆண்டுகள் கழித்து உங்களால் பணத்தை எடுக்க முடியும்.
No comments:
Post a Comment